விருதுநகர் மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நல குழுவின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரப்பட உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்
பணியிடம் – 01
தொகுப்பூதியம் ரூ.11,916–ஒரு மாதத்திற்கு
கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது: அடிப்படை கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கணினி படிப்பில் பட்டயச்சான்று பெற்று இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்: கணினி சார்ந்த பணிகளில் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மேற்குரிய பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அதனைதொடர்ந்து பதவிகளுக்கான தகுதி உள்ள நபர்களிடம் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் வருகின்ற 29ஆம் தேதி மாலை 5:30 மணிக்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். வருகின்ற 29ஆம் தேதிக்கு பிறகும் வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2830-5 – வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் – 626 003. தொலை பேசி எண். 04562-293946.