Categories
மாநில செய்திகள்

மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பணியிட மாறுதல்…. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிரடி….!!!

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பணியிட மாறுதல்களில் குழப்பங்கள் நடந்ததாக கூறப்படுகின்றன. இதனிடையே கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா பரவல் கலந்தாய்வு நடைபெறவில்லை.

தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் பணியிட மாறுதல் சீனியாரிட்டி முறைப்படி கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர். மேலும் சீனியாரிட்டி அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் அதில் எந்த முறைகேடுகள் நடைபெறாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி கடந்த 12ஆம் தேதி ஆன்-லைன் மூலமாக கலந்தாய்வு நடைபெற்றது. அந்த கலந்தாய்வில் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்ட சீனியாரிட்டி முறையில் பணியிட மாறுதலுக்கான உத்தரவுகளை பெற்றனர். இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக பணியிடங்களில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று விண்ணப்பங்கள் வந்தால் ஏற்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை ஆணையர் தெரிவித்தார். இதையடுத்து 110 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சீனியாரிட்டி முறையில் பணியிட மாறுதலில் நேர்மையான முறையில் கலந்தாய்வு நடைபெற்றது என்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |