Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் போட்டி…. சூப்பர் ஸ்கெட்ச்…. நாற்காலியில் உட்கார ரெடியான அமைச்சர்கள்….!!!

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இருக்கிறார். இதனையடுத்து திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் இருக்கிறார். இந்நிலையில் கடலூரில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை நடத்துமாறு தி.மு.க மேலிடத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மாவட்ட செயலாளர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த எதிர்பார்ப்பு இருப்பினும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசனை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கடலூரை பொறுத்தவரையில் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசனைதான் தி.மு.க கட்சி என்று தொண்டர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகத்தான் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் சி.வெ கணேசன் மற்றும் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆகியோரே தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கடலூர் மாவட்டம்  3 தொகுதிகளாக பிரிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், இது  உண்மை கிடையாது என்று தி.மு.கவினர் மறுத்து வருகின்றனர். எனவே மாவட்ட செயலாளர் பதவிக்கு யார் வருவார் என்றும், 3 தொகுதிகளாக மாவட்டம் பிரிக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Categories

Tech |