நாகர்கோவிலில் மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் நேற்று மாவட்ட மருத்துவர் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்க மாவட்ட செயலாளர் சுரேஷ் வரவேற்று பேசினார்.
மேலும் இதில் மாநகராட்சி மேயர் மகேஷ், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள். இந்த மாநாட்டில் மருத்துவ சமுதாய மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியல் அதிகாரத்தில் பங்கு பெற தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
முடி திருத்துவோர் நலக் கழகம் அமைக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தை தழுவிய மருத்துவ சமூக மக்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைக்க வேண்டும். முடி திருத்தும் கடை நடத்துபவர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பன போல பல கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.