தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,கோவை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன் காரணமாக நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அவ்வகையில் காஞ்சிபுரம், வேலூர் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணம்,இறப்பு வீடுகளில் கூடுவதற்கு மீண்டும் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை மக்களை அச்சுறுத்தி வருவதால் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அமலாகுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கொரோனா பரவலைகட்டுப்படுத்த கண்காணிப்பை தீவிரப்படுத்த படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ள நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகள் மீண்டும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை முறையாக பின்பற்றினால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்று அரசே அறிவுறுத்தி வருகிறது.