Categories
உலக செய்திகள்

மாஸ்கோ மகாத்மா காந்தி சிலை… ராஜ்நாத் சிங் மரியாதை…!!!

ரஷ்யா சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி மாஸ்கோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்ற கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று தொடங்கியது. அந்தக் கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அவர் ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

அந்தக் கூட்டத்திற்குப் பிறகு மாஸ்கோவில் இருக்கின்ற இந்திய தூதரகத்திற்கு ராஜ்நாத்சிங் சென்றார். அங்கு தூதரக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்புத் துறை மந்திரியை சந்திக்க சீன பாதுகாப்பு துறை மந்திரி கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆனால் சீனாவின் அந்தக் கோரிக்கைக்கு இந்தியா தரப்பில் தற்போது வரை எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை.

Categories

Tech |