Categories
தேசிய செய்திகள்

மாஸ்க்டு ஆதார்… பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழுவிபரம்…!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமகன்களுக்கு UIDAI-ன் அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும்.வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது. நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது.இதனால் மோசடிகளை தவிர்ப்பதற்காக தற்பொழுது அதிகாரப்பூர்வமான அமைப்பான UIDAI அனைத்து மக்களையும் மாஸ்க்டு ஆதார் கார்டை பயன்படுத்த அனுமதிக்கிறது.

இந்த அட்டையில் உங்களது 12 இலக்க ஆதார் எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். உங்களைப் பற்றிய தனித் தகவல்கள் எதுவுமே அதில் இடம்பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஆதார் எண்ணைபகிர்வது அவசியம் இல்லாத இடங்களில் மாஸ்க்டு ஆதாரை eKYC க்காக பயன்படுத்தலாம். இது உங்கள்  ஆதாரின் கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டுகிறது. இதனை https://eaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்திலிருந்து உங்கள் ஆதார் பதிவிறக்கம் செய்யும் போது மாஸ்க் அணிந்து விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.

மாஸ்க்டு செய்யப்பட்ட ஆதாரை பதிவிறக்கம் செய்வது எப்படி?

  • பிரவுசரில் https://eaadhaar.uidai.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்
  • உங்களின் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும
  • எனக்கு மாஸ்க்டு ஆதார் வேண்டும்’ ‘I want a masked Aadhaar’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.
  • சரிபார்ப்பிற்காக வழங்கப்படும் Captcha சரிபார்ப்புக் குறியீட்டை உள்ளிடவும்
  • Send OTP’ என்பதைக் கிளிக் செய்யவும்
  • இ-ஆதார் நகலை பதிவிறக்கம் செய்யவும் என்பதை தேர்வு செய்யவும்.
  • பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு, “ஆதாரைப் பதிவிறக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.

Categories

Tech |