Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியாததால்…. கறுப்பினத்தவரை தாக்கிய போலீசார்…. வெளியான வீடியோ…!!

மாஸ்க் அணியாமல் வந்த கறுப்பினத்த நபரை காவல்துறையினர் தாக்கியுள்ளதால் கடும் கண்டனம் எழும்பியுள்ளது.

பிரான்ஸைச் சேர்ந்த Michel Zecler என்ற இசையமைப்பாளர் முக கவசம் அணியாமல் சென்றதற்காக காவல்துறையினர் அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை தாக்கும்போது காவல்துறையினர் இன ரீதியாக விமர்சனம் செய்ததாகவும் Michel Zecler புகார் அளித்துள்ளார். முதலில் அவர் கைது செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு அதற்கு பதிலாக அவரைத் தாக்கிய காவல்துறையினர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், “கருப்பினத்தவரான  இசையமைப்பாளர் ஒருவரை காவல்துறையினர் அடித்து நொறுக்கும் வீடியோவை நான்  பார்த்தேன். அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இது அவமானத்திற்குரியது” என்றும் கூறியுள்ளார்.

காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் இருக்கும் நம்பிக்கை மீண்டும் உருவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் Michel Zecler தாக்கிய காவல்துறையினர் மூவர் அடையாளம் காணப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரீஸ் மேயர் முதல் பிரான்ஸ் அணியின் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர்கள் வரை இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |