Categories
அரசியல்

மாஸ்க்  அணியாதவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு தெரியுமா?  கேட்டா ஷாக் ஆயிடுவீங்க…!!!

மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க இதுவரை சென்னையில் மட்டும் ரூபாய் 2.25 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதென சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கினை அறிவித்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு படிப்படியாக ஊரடங்கு தளர்வினை கொண்டுவந்தது.அதேசமயம் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்,சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், கைகளை அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் போன்ற பல விதிமுறைகளை கடைபிடிக்க பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பல இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பதை அறிந்த அதிகாரிகள் அதனை கட்டாயமாக்க பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.அதன்படி முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னையில் மட்டும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை ரூபாய் 2.25 கோடியென சுகாதாரத்துறை தற்பொழுது அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக சுகாதாரத் துறையின் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக இருக்குமெனவும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |