Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணியாத மாணவர்…. போலீசார் செய்த கொடூர செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை வியாசர்பாடி புதுநகர் பகுதியில் அப்துல் ரஹீம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தரமணியில் உள்ள சட்டக்கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பயின்று வருகிறார். மேலும் இவர் அருகில் உள்ள பார்மசி ஒன்றில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்துல் ரஹீம் பணி முடிந்து வீடு திரும்பியபோது, எம் ஆர் ஜங்சன் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மாஸ்க் அணியாமல் வந்த சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கொடுங்கையூர் போலீசார் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டரில், ரவுடிகளை பிடிக்க சொன்னால் மாணவர்களை சித்ரவதை செய்வதா…? ரவுடித்தனம் செய்த போலீசார் இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் போலீசாரால் கைது செய்யப்பட்ட அப்துல் ரஹீமை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |