Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதை செஞ்சு தான் ஆகனும்… வேற வழியே இல்ல… மீறினால் அபராதம் தான்..!!

 அரியலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக முக கவசம் அணியாமல் வெளியில் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

கொரோனா தொற்று மீண்டும் அதிகமாக பரவுவதை தடுப்பதற்காக மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தீவிரமாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்  அரியலூர் மாவட்டத்திலுள்ள காரைக்குறிச்சி கடைவீதியில் நேற்று வைரஸ் தொற்று குறித்து விழிப்புணர்வு  மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தொற்று அதிகரிப்பதை தடுப்பதற்காக தீடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டனர். இதனையடுத்து மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். அதில் ஒருவருக்கு  200 விதம் 9 பேரிடம் 1800 அபராதமாக வசூலிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் அவர்களுக்கு மாஸ்க் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |