Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணியாமல் வெளியே செல்லலாம்…. பரபரப்பு அறிவிப்பு….!!!

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்காவில் முழு அளவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் முக கவசம் அணியாமல் வெளியே செல்லலாம் என்று அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வீட்டிற்குள் இருக்கும் போது கூட கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் முகக்கவசம் தேவையில்லை என்று பரபரப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |