Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் அணியாவிட்டால் 2000 அபராதம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்.

பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு தற்போது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி முக கவசம் அணியாவிட்டால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |