Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா?… அப்போ கொரோனா வார்டில் பணி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இனி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் கட்டாயம் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி முக கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் முக கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் கட்டாயம் பணி செய்ய வேண்டும் என்ற குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எச்சரிக்கை மற்றும் அபராதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், முக கவசம் அணியாமல் வெளிவருபவர்கள், மருத்துவம் தொடர்பு இல்லாத இடத்தை சுத்தம் செய்தல், சமையல் செய்வதில் உதவுதல் மற்றும் தகவல் சேகரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |