Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா…? எச்சில் துப்பினீர்களா…? ரூ.500 கொடுத்துட்டு போங்க…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  கொரோனா நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மாஸ்க் போடாமல் பொதுஇடங்களுக்கு சென்றால் அபராத தொகையும் வசூலிக்கப்படுகின்றது. இந்நிலையில் ரயில்கள் மற்றும் ரயில்வே நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எச்சில் துப்புவோருக்கும் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |