Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்டர் படத்தால் நடந்த கொடூரம் – தமிழகத்தில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் …!!

பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் விஜய் – விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு பல தரப்புகளில் இருந்து வரவேற்பு குவிந்து வருகிறது.

படத்தின் தொடக்க நாளில் கொரோனா இருந்தும் கூட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படத்தை கண்டுகளித்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது

சென்னை நெற்குன்றத்தில் லேப்டாப்பில் மாஸ்டர் படம் காட்டுவதாக அழைத்துச் சென்று 13 வயது சிறுமியை 21 வயதான வினோத் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமியின் தாயும், தந்தையும் சிறுமியை விட்டுவிட்டு மாஸ்டர் படத்திற்கு சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி தனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு இளைஞரிடம் புலம்பியதையடுத்து அந்த நபர் படம் காட்டுவதாக வன்கொடுமை செய்துள்ளார்.

Categories

Tech |