மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் எழில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மகனாக எழில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் ஒரு காட்சியில் விஷால் நடித்துள்ளார். மேலும் அதே படத்தில் விஜய்யின் மாணவனாக நடித்த சிபி சந்திரன் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.