நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளங்களை கொண்டிருப்பவர். தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீசுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சமீபத்தில் இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலால் அதிர்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு படம் தியேட்டரில் தான் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது .
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியானது. பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை அதாவது ஜனவரி 13-ஆம் தேதி திரைப்படத்தை வெளியிட உள்ளதாக திட்டமிட்டு வருகிறார்களாம். அவ்வாறு வெளியிட்டால் புதன், வியாழன், வெள்ளி,சனி, ஞாயிறு என தொடர்ந்து ஐந்து நாட்கள் மாஸ்டர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்துவது உறுதி.