மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் தான் இந்தியாவில் அதிகளவில் டிஸ்லைக் ஆகுமென ட்விட்டரில் தெரிவித்த மீரா மிதுன்..
இளையதளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படம் இந்த கோடை விடுமுறையில் வெளிவருவதாக இருந்தது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணத்தால் தள்ளிச் சென்று கொண்டிருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அனைத்தும் சமூக தளங்களில் வைரலாகி வந்தது. மார்ச் மாதத்தின் இறுதியில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ட்ரெய்லர் வெளிவராமல் இருப்பது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
இருந்தபோதிலும் விஜய் ரசிகர்கள் நிலைமையை புரிந்து கொண்டு மாஸ்டர் படத்தின் ட்ரெய்லரை இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் தெறிக்க விடவேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு வாங்கினாலும் அடங்காத மீரா மிதுன், மாஸ்டர் படத்தின் டிரைலரை இந்திய அளவில் அதிக டிஸ் லைக் பெரும் ட்ரெய்லர் ஆகும் என்று கூறியுள்ளார்.
வாரிசு நடிகை ஆலியாபட்டின் சதக்-2 திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒரே நாளில் ஆறு மில்லியன் டிஸ்லைக் பெற்றுள்ளதால், இந்தி சினிமாவில் நெப்போடிசம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால், தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான விஜய்யின் மாஸ்டர் படத்திற்கும் அந்த நிலைமை நேரும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மீரா மிதுன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.