Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ பட ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகிய சல்மான்கான்… என்ன காரணம்?…!!!

மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருந்து சல்மான்கான் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, கௌரி கிஷன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதில் சல்மான்கான் கதாநாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்தார் .

Salman Khan To Star In The Hindi Remake Of Vijay's Master | RITZ

மேலும் அவர் இந்த கதையில் ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்றபடி சில மாற்றங்கள் செய்யும்படி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் மாற்றி எழுதப்பட்ட கதையில் தனக்கு திருப்தி இல்லாததால் சல்மான்கான் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் சல்மான்கான் கைவசம் 3 படங்களை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |