மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நாட்டாமை, முகவரி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மகேந்திரன். இதையடுத்து இவர் விழா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது கதாபாத்திரமாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது மகேந்திரனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் மகேந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மணிகண்டன் தலகுட்டி இயக்கும் இந்த படத்திற்கு ‘அர்த்தம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபல நடிகை ஸ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் நந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராதிகா ஸ்ரீநிவாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.