Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ்டர்’ ரிலீஸ் தேதி… அட்ராசக்க… வெறித்தனம்…!!!

நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் படம் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்து படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தை வருகின்ற ஜனவரி மாதம் 13ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது அவர் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது. இது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |