கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிக்கும் “மகான்” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு விக்ரம் படம் வெளியாவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.