Categories
சினிமா தமிழ் சினிமா

‘மாஸ் அறிவிப்பு’… பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் பதிவு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார் .

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் பேராதரவுடன் ஆரி டைட்டிலை வென்றார் . தற்போது நடிகர் ஆதி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . மேலும் இவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் ஆரி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |