வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இடையில் படவாய்ப்புகள் இல்லாமல் பல சறுக்கல்களை சந்தித்த இவர் மாநாடு திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இவருக்கு டாக்டர் பட்டம், பல பட வாய்ப்புகள், விளம்பரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அசத்தி பிஸியாக இருக்கின்றார் சிம்பு. இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் சென்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. இத்திரைப்படமானது முதல் நாளில் 10.86 கோடியும் இரண்டாவது நாளில் 8.51 கோடியும் மொத்தமாக 20 கோடி வரை வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது.