Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் காட்டும் சூர்யா…. வாளுடன் கெத்தான போஸ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

முன்னணி நடிகர் சூர்யா வாளுடன் கெத்தாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரது 40 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். மேலும் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூர்யாவின் புகைப்படம் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் சூர்யா வேஷ்டி, சட்டை அணிந்த படி வாளுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சூர்யா

Categories

Tech |