தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்சென்னையில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்த தகுதியான 82 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும், 12% பேர் இன்னும் ஒரு தவணை கூட செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் வாரம்தோறும் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தியதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.