Categories
தேசிய செய்திகள்

மாஸ் காட்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை….. போன் பே, கூகுள் பே, பேடிஎம் அசத்தல் சாதனை…..!!!!

இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனைகள் 99 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போன்களில் google pay, ஃபோன் பே, பேடிஎம் போன்ற மொபைல் ஆப்புகள் மூலம் ஷாப்பிங் செய்வது, பணம் அனுப்புவது, பெறுவது போன்ற பல தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடிகின்றது. இதனால் யுபிஐ பயன்பாடு தற்போது அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் யுபிஐ பரிவர்த்தனை குறித்து வேர்ல்ட் லைன் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 10 லட்சம் கோடி மதிப்புக்கு யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது. அதேபோல ஏப்ரல் ஜூன் காலாண்டில் மொத்தம் 14 புள்ளி 55 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இவற்றின் மதிப்பு 26.10 லட்சம் கோடி. யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 99 சதவீதமும், அடிப்படையில் 90% வளர்ச்சி அடைந்துள்ளது.

அதிகமான யுபிஐ பரிவர்த்தனை செய்யப்பட்ட மொபைல் ஆப்புகளாக google pay, போன் பே, பேடிஎம், பேமண்டல் பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆப் போன்ற செயலிகள் உள்ளன. பேடிஎம், கூகுள் பே ,போன் பே மூலமாக மட்டுமே மொத்த பரிவர்த்தனைகளில் 94 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது. பரிவர்த்தனைகளுக்கான தேவையை பொருத்தவரையில் மளிகை கடை, உணவகம், ஜவுளி கடை, மருந்தகம், ஹோட்டல் போன்றவற்றில் அதிகளவில் யுபிஐ பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |