பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்கு ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் . அடுத்ததாக இவர் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் ‘சஹோ’. இதையடுத்து நடிகர் பிரபாஸின் -20வது படத்தை கேகே ராதாகிருஷ்ணன் இயக்குகிறார்.’ராதே ஷ்யாம்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தபடத்தை சஹோ படத்தை தயாரித்த யூ வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதைத்தொடர்ந்து பிரபாஸின் 21-வது படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார் . கதாநாயகியாக தீபிகா படுகோனே நடிக்கும் இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையடுத்து ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகும் பிரபாஸின் 22-வது படமான ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்குகிறார். மேலும் பிரபாஸின் 23 வது படமான ‘சலார்’ திரைப்படத்தை கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்குகிறார். நடிகர் பிரபாஸின் அடுத்தடுத்த இந்த நான்கு படங்களின் பட்ஜெட்டை சேர்த்தால் ரூ.1000 கோடியை தாண்டும் . இந்திய திரையுலகில் ஒரே சமயத்தில் ரூ.1000 கோடி முதலீடு செய்யப்பட்ட நடிகராக பிரபாஸ் மாஸ் காட்டி வருகிறார்.