Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா விமர்சனம்

மாஸ் காட்டும் விஜய் சேதுபதி… வேற லெவல்ல கலக்கும் நயன், சமந்தா…. “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் விமர்சனம் இதோ….!!!

காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றது.

விக்னேஷ் சிவன் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான முதல் திரைப்படம் நானும் ரவுடி தான். இதைத் தொடர்ந்து தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இத்திரைப்படத்தில் சமந்தா மற்றும் நயன்தாரா கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றார்கள். இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் டுவிட்டரில் கமெண்ட்களில் கருத்துக்களை குவித்து வருகின்றார்கள். அவர்கள் கூறியுள்ளதாவது, படம் வேற லெவல் இருப்பதாகவும் சமந்தா நயன்தாரா 2 பேரும் செம என்றும் விஜய் சேதுபதி கலக்கி இருப்பதாகவும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகின்றார்கள். மேலும் படத்தின் கான்செப்ட் புதுமையாக இருப்பதாகவும் கூறுகின்றார்கள். நானும் ரவுடிதான் திரைப்படத்தின் பார்த்த நயன் மட்டும் இத்திரைப்படத்தில் மிஸ்ஸிங் எனவும் சமந்தா அவரை ஓவர்டேக் செய்து விட்டதாகவும் நெட்டிசன்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |