Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ், கிளாஸ், பக்கா மாஸ்”…. ஆக்ரோஷமான வேடத்தில் ஷாருக்…‌ வைரலாகும் வேற லெவல் டீசர் வீடியோ…..!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் தோல்வி அடைந்த நிலையில், தற்போது எப்படியாவது வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற புது உத்வேகத்துடன் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மெர்சல் மற்றும் தெறி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அட்லி இயக்குகிறார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நயன்தாரா மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சாருக்கான் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல நடிகை தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். அதன் பிறகு நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் ஷாருகான் ஆக்ரோஷமான வேடத்தில் நடித்துள்ள பதான் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |