உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ் அப்,பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள். இது தகவல் தொடர்புக்காக மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதன்மூலம் வீடியோ கால் மூலமாகவும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் அம்சங்களும் இருக்கிறது. இதற்கிடையில் whatsapp நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போதும் புது அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் ஆப்பை இதுவரை நாம் மொபைல் மற்றும் கணினியில் உபயோகித்து வந்தோம். தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம் ’COMPANION MODE’ என்னும் புதிய ஆப்ஷன் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் ஒரு வாட்ஸ் ஆப்பை இரு மொபைல்களில் பயன்படுத்தலாம். கியூ ஆர் கோடை ஸ்கோன் செய்தால் போதும் இரு மொபைலிலும் ஒரே வாட்ஸ் ஆப் உபயோகிக்க முடியும்.