Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மாஸ்..! பாகிஸ்தான் 20….. இந்தியா 21….. “ஒரே ஆண்டில் அதிக டி20 வெற்றி பெற்று சாதனை..!!

ஹைதராபாத்தில் நடந்த கடைசி டி20 போட்டியில் ஆஸியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ஐ வென்ற பாகிஸ்தானின் சாதனையை இந்தியா முறியடித்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலியா அணி 3 போட்டியில் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2ஆவது டி20போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றது.  எனவே இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது..

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் மற்றும் கேஎல் ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், விராட் கோலி(63) மற்றும் சூரியகுமார் யாதவ்(69) அதிரடியாக ஆடியதால் 19.5 ஓவரில் 187/4 ரன்கள் எடுத்து வென்றது.. இதனால் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு உலக சாதனையை படைத்துள்ளது.. அதாவது, ஒரு காலண்டர் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டி20 வெற்றியானது 2022 ல் சர்வதேச டி20 இல் இந்தியாவின் 21 வது வெற்றியாகும். 2022 இல் 28 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 21 வெற்றிகளை குவித்துள்ளது. 

இதற்கு முன் 2021 இல் 20 டி20 போட்டிகளை வென்று பாகிஸ்தான் உலக சாதனையாக வைத்திருந்தது. தற்போது பாகிஸ்தான் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது..  இந்தியா இந்த ஆண்டு அவர்களின் சொந்த மண்ணில் மட்டும் 10 டி20 போட்டிகளில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |