தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் வெளியிடாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தின் டப்பிங்ஙக்ஷகை முடித்திருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார். இந்நிலையில் அஜித் படப்பிடிப்பு தளத்தில் போனி கபருடன் பேசிக்கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அதில் லைட் கலர் உடையில் சண்டைக் காட்சிகள் நடித்திருக்கிறார். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#Thunivu🔥🔥🔥 pic.twitter.com/Flb87UguwP
— Director H Vinoth Fans Club (@dirhvinoth7) November 1, 2022