Categories
சினிமா தமிழ் சினிமா

மாஸ் லுக்கில் மிரட்டும் சிரஞ்சீவி…. அசத்தலான லுக்கில் நயன்தாரா…. இணையத்தில் வைரலாகும் டிரைலர்….!!!!

மலையாளத்தில் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் லூசிபர். இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குனர் மோகன்ராஜ் தெலுங்கு ரீமேகில் இயக்கி உள்ளார். இந்த படம் தெலுங்கில் பாட்ஃபாதர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் சல்மான்கான் நடத்தி இருக்கிறார்.

சூப்பர் குட் பிலிம் மற்றும் என்.வி.ஆர்.பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். காட்பாதர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இப்படத்தின் டடிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன் காட்சிகளை உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

Categories

Tech |