Categories
சினிமா தமிழ் சினிமா

“மாஸ் லுக்கில் மிரட்டும் கார்த்தி” இணையத்தை கலக்கும் சர்தார் பட டீசர்…. செம வைரல்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் விருமன் திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே நடிக்க, ராசி கண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ் காந்த், மாஸ்டர் ரித்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கும் சர்தார் திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா தன்னுடைய twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நடிகர் கார்த்தி பட டீசர் தற்போது இணையதளங்களில் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

Categories

Tech |