சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் “டான்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது “டான்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயனுடைய எஸ்.கே புரோடக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு செய்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடந்துவந்தது. ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவரின் இணையதளப்பக்கத்தில் டான் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளார்.