தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராம்சரண் கடந்த 2007-ம் ஆண்டு சிருதா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த மகதீரா என்ற திரைப்படம் ராம் சரணுக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன்பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கி நேற்றோடு 15 வருடங்கள் முடிவடைந்துள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் நடிகர் ராம் சரணுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், ராம்சரணின் தந்தையுமான சிரஞ்சீவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் மகதீராவிலிருந்து ரங்கஸ்தலம், ஆர்ஆர்ஆர் இப்போது சங்கருடன் ஆர்சி15. நடிகை ராம்சரண் எப்படி உருவெடுத்து இருக்கிறார் என்பதை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவரின் ஆர்வம், உழைப்பு, அர்ப்பணிப்பு, அவர் எடுத்துக் கொண்ட பணியில் உற்சாகம் மற்றும் உத்வேகம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. மேலும் பல உயரங்களையும் வளர்ச்சிகளையும் அடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
On reaching the 15 years milestone, fondly reflecting on @AlwaysRamCharan ‘s journey in films.
It is heartening how he has evolved as an Actor from #Chirutha to #Magadheera to #Rangasthalam to #RRR ..and now to #RC15 with Director Shankar pic.twitter.com/WKljqRzbyi
— Chiranjeevi Konidela (@KChiruTweets) September 28, 2022