Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

மிகக்குறைந்த விலையில்!… ஐபோன் 13ல் அதிரடி தள்ளுபடி…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 தொடரை சென்ற மாதம் அறிமுகம் செய்தது. இத்தொடரின் அறிமுகத்துக்கு பின்பும், பல ஆப்பிள் பிரியர்கள் ஐபோன்-13 போனை விரும்பி வாங்குகின்றனர். நீங்களும் ஐபோன் 13ஐ வாங்க விரும்பி, அதன் விலையானது மேலும் குறைய காத்திருக்கிறீர்கள் எனில், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. பிளிப்கார்டில் கடந்த 11ஆம் தேதி முதல் தீபாவளி விற்பனையானது துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றில் ஐபோன் 13ல் மிகப் பெரிய தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. வரும் அக்..16ஆம் தேதி வரையிலும் நடக்கும் விற்பனையின் வாயிலாக ஐபோன்-13ஐ மிகக்குறைந்த விலையில் வாங்கலாம்.

அதாவது, ஐபோன் 13 இன் 128 GP சேமிப்பு மற்றும் பச்சைநிற மாறுபாடு பற்றி நாம் பார்க்கிறோம். ஐபோன் 14 அறிமுகத்துக்குப் பின் ஐபோன் 13, பிளிப்கார்ட்டில் ரூபாய்.69,900க்கு விற்கப்படுகிறது. விற்பனையின் கீழ் இப்போனின் விலையானது 14 சதவீத தள்ளுபடிக்குப் பின் ரூபாய்.59,990 ஆக குறைந்து இருக்கிறது. ரூ.59,990க்கு கிடைக்கும் ஐபோன் 13-ஐ, கூடுதல் சலுகைகளின் உதவியுடன் இன்னும் மலிவாகப் பெறலாம். எஸ்பிஐ-ன் கிரெடிட்கார்டைப் பயன்படுத்தினால் ரூபாய்.2,250 சேமிக்கமுடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அதன்பின் ஐபோன் 13ன் விலை ரூபாய்.57,740 ஆக குறையும். பழைய போனுக்கு ஈடாக இதனை, பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் வாங்கினால் ரூபாய்.16,900 வரை தள்ளுபடி கிடைக்கும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப்பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 13-ஐ ரூபாய்.40,840க்கு வாங்கலாம். இந்த டீலில் ஐபோன் 13ன் 128 ஜிபி சேமிப்புமாறுபாடு குறித்து பேசப்படுகிறது. 5ஜி சேவைகளுடன்கூடிய இந்த ஐபோன் 13ஆனது 6.1-inch Super Retina XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமரா பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட 2 சென்சார்களும் 12MP மற்றும் முன் கேமராவும் 12MP ஆகும். இரட்டைசிம் சேவைகள் உடைய இப்போனில், உங்களுக்கு 1 வருட பிராண்ட்வாரண்டியும் வழங்கப்படும்.

Categories

Tech |