Categories
மாநில செய்திகள்

“மிகக் கடுமையான வாகன அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்”…? மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சி வலியுறுத்தல்…!!!!!!

வாகன சட்டத்திருத்தம் மூலமாக மிக கடுமையான அபராதம் வசூலிக்கப்படுகிறது அதனால் அபராத கட்டண உயர்வை கைவிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் அதனை தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் தமிழக அரசின் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் போடாமல் பயணம் மேற்கொள்வது, அதிக வேகத்தில் பயணம் மேற்கொள்வது, ஒரு வழி பாதையில் பயணம் போன்ற அனைத்து விதமான விதிமீறல்களுக்கும் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தை விட 400 சதவீதம் முதல் 1900 சதவிகிதம் வரை அபராத தொகையானது உயர்த்தப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் சாலை விபத்துகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சொன்னாலும் கூட இத்தகைய அபராத விதிப்பின் மூலம் மட்டுமே விபத்துகளை தடுத்துவிட முடியாது.

அதற்கு மாறாக போக்குவரத்து சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை விரிவான முறையில் மேற்கொள்வதை உறுதி செய்வதோடு கூடுதலான தன்னார்வலர்களை இந்த பணியில் ஈடுபடுத்த முன்வர வேண்டும். அதேபோல் தேவையான போக்குவரத்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே விபத்து மற்றும் உயிரிழப்பு விகிதங்களை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதனால் மிக கடுமையான உயர்த்தப்பட்டுள்ள அபராத கட்டண விகிதங்களை முழுமையாக கைவிட வேண்டும் எனவும் போக்குவரத்து சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்களை கூடுதலாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |