Categories
தேசிய செய்திகள்

இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை தடை…. அதிரடி அறிவிப்பு….!!!

ரயில்களில் இனி இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள்  மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ரயில்களில் இனி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து சார்ஜிங் பாயிண்ட்களை அணைத்து வைக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பரிந்துரைத்துள்ளார். அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜ் பாயிண்டுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |