பிரதமர் நரேந்திர மோடி கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் மிகப்பெரிய ஆறு திட்டங்களை இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி உத்தரகாண்டில் கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் 6 பெரிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்க உள்ளார். காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கங்கை நதியை மையமாகக் கொண்டு நடைபெற்ற கலாச்சார வளர்ச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கக்கூடிய முதல் அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
அதுமட்டுமன்றி தினம்தோறும் 26 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க கூடிய கூடம் கட்டுவது, ஹரித்துவார் பகுதியில் 26 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் கூடத்தை மேலும் மேம்படுத்துவது, சரை என்ற இடத்தில் 18 மில்லியன் லிட்டர்கள் கழிவுநீரை சுத்திகரிக்க கூடிய கூட்டத்திற்கான கட்டுமான பணி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைக்க உள்ளார்.