தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதை தமிழகத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாடி தங்களுடை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்றும் அனைத்து வயதினருக்கும் வாய்ப்பளிக்கப்படும். வயது என்பது முக்கியமல்ல. இளம், மூத்த தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
Categories