Categories
உலக செய்திகள்

மிகப்பெரிய கோடீஷ்வர குடும்பம்… மகன்கள் செய்த மோசமான செயல்…. நொந்து போன உறவினர்கள் …!!

வெளிநாட்டில் கோடிஸ்வராக இருக்கும் பெற்றோரின் மகன்கள் தாய் நாட்டில் போதைப் பழக்கத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்

பிரான்ஸில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் கோடிஸ்வர பெற்றோர் இலங்கையில் இருக்கும் தங்களது மகன்கள் இருவருக்கும்  ஆடம்பர வாழ்க்கை வாழ தொடர்ந்து பணம் அனுப்பி வந்தனர். இதனால் இரண்டு மகன்களும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதுடன் அதனை விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இருவரும் கொழும்பு காவல்துறையினரிடம் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுடன் சிக்கியுள்ளனர்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்களது பெற்றோர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சிற்கு குடியேறினர். அவர்கள் செய்த வர்த்தக முதலீட்டினால் கோடீஸ்வரர்கள் ஆகினர். ஆனாலும் அவர்களது மகன்கள் இருவரும் கொச்சிக்கடை பிரதேசத்திலேயே வீடு ஒன்றை ஆடம்பரமாக கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் நாள் ஒன்றுக்கு 7,000 ரூபாயை  போதைப் பொருளுக்கு செலவு செய்கின்றனர். விமான நிலையத்தில் பணிபுரிந்து வந்த இவர்கள் போதைப் பொருளை பயன்படுத்தியதால் தங்கள் பணியை இழந்தனர். இதனிடையே ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பிள்ளைகளுக்காக பிரான்ஸில் இருக்கும் பெற்றோர் மோட்டார் வாகனம் ஒன்றையும் வாங்கி கொடுத்தனர். அந்த வாகனத்தை பயன்படுத்தி தான் போதைப் பொருட்களை விற்பனை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |