Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப் பிரபல தமிழ் நடிகர்… நேற்று திடீர் மரணம்… திரைஉலகில் அதிர்ச்சி…!!!

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழ் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகர் தவசி (60) புற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு பல்வேறு நடிகர்களும் முன்வந்து உதவி செய்தனர். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகர் தவசி காலமானார். அவரின் உணவு குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் மறைவுக்கு திரைப்பட பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் கிழக்கு சீமையிலே, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் தவசி. அவரின் மறைவு திரை உலகில் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |