பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் மூச்சுத்திணறல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் உடல்நிலை மோசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்த தேர்தலில் அவர் போட்டியிட வில்லை. இருப்பினும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார், அதன் காரணமாக திடீரென்று அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன் பின் உடல் நலம் தேறிய கார்த்திக் மருத்துவர் அறிவுரையை மீறி மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆதரித்து பிரச்சாரம் செய்தார். மீண்டும் அவருக்கு கடந்த ஐந்தாம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் தீவிரமாகி உடல்நிலை மோசமானதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.