Categories
சினிமா தமிழ் சினிமா

மிகப் பிரபல தமிழ் நடிகர் மீது… பெண் பரபரப்பு புகார்…!!!

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் நிலையத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மனைவி வீணா என்பவர், நடிகர் ஆர்கே சுரேஷ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் எனது கணவர் ராமமூர்த்தி எஸ்பிடி என்ற பெயரில் ஒரு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு 10 கோடி கடன் வாங்கி தருவதாக சென்னையிலுள்ள கமலக்கண்ணன் கூறினார். அதன் பெயரில் திரைப்பட நடிகரான ஆர்கே சுரேஷை எனக்கும், எனது கணவருக்கும் அவர் அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் அவர் தனது தெரிந்த வங்கி மேலாளர் மூலமாக கடன் ஏற்பாடு செய்வதாகவும், அதற்கு கமிஷனர் ஒருகோடி கொடுக்கும்படியும் கூறியுள்ளார். அவரது கணவரும் ஒரு கோடி ஏற்பாடு செய்து ஆர்கே சுரேஷ் வங்கி கணக்கில் 93 லட்சம் டெபாசிட் செய்தும், மீதம் 7 லட்சம் ரூபாயை பணமாக கொடுத்துள்ளார். இதையடுத்து வங்கி மேலாளர் ஒருவரை சந்தித்து அவர் முன்னிலையில் என்னிடமும், எனது கணவரிடம் பல ஆவணங்களில் கையெழுத்து வாங்கினார். நிரப்பப்படாத சோலைகளிலும் என்னிடமும், எனது கணவரிடமும் கையெழுத்தை வாங்கி கொண்டார்.

இதையடுத்து வங்கி மேலாளர் 10 கோடி ரூபாய் கடன் உங்கள் கணக்கில் வரும் என்று கூறி எங்களை அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் 10 கோடி ரூபாய் எங்களுக்கு வரவே இல்லை. இது குறித்து அவரிடம் பலமுறை கேட்டும் அவர் தங்களுக்கு சரியாக பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து கேட்டபோது அவர் தன்னையும் தனது மகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |