தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது பொன்னியின் செல்வன், ராங்கி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேற்கொண்டு எந்த படத்திலும் அவர் கமிட்டாகவில்லை. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். தான் திருமணம் செய்ய இருக்கும் நபர் மற்றும் திருமணத் திட்டம் குறித்த விவரங்களை அவர் விரைவில் வெளியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.