Categories
அரசியல் மாநில செய்திகள்

மிகவும் கீழ்த்தரமான பேச்சு…. நாவடக்கம் தேவை…. TTV தினகரன் கண்டனம்….!!!!!

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்பி ஆ ராசா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு, எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் ஆ.ரசாவின் சர்ச்சை பேச்சுக் குறித்து, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்துமதத்தைப் பின்பற்றுபவர்களை இழிவுபடுத்தும் விதமாக தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மிகவும் கீழ்த்தரமாக பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

மத உணர்வுகளைத் தூண்டும் இத்தகைய பேச்சுகளை அனுமதிப்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நாவடக்கம் தேவை” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |