புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 6-ஆம் தேதி பகல் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளங்களில் விற்பனையாக உள்ளது. இந்த ரியல்மி சி31 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட UI R எடிஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 6.5 இன்ச் HD+ எல்.சிடி டிஸ்ப்ளே 120Hz டச் சாம்பிளிங் ரேட்டுடன் வழங்கப்படவுள்ளது. இதில் 12nm Unisoc T 612 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் f/2.2 லென்ஸ் கொண்ட 13 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, f/2.8 லென்ஸ் கொண்ட மோனொகுரோம் சென்சார், f/2.4 லென்ஸ் கொண்ட மேக்ரோ கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்த போனில் சைட் மவுண்டட் ஃபிங்கர் பிரிண்ட், 5000 mAh பேட்டரி, 10 W சார்ஜிங் உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனின் 3ஜிபி/32ஜிபி மாடலின் விலை ரூ.8,999-ஆகவும், 4ஜிபி/64ஜிபி வேரியண்டின் விலை ரூ.9,999-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.